30 March 2014

இலக்கண குறிப்பறிதல் - உவமைத் தொகை -TNPSC

உவமைத் தொகை: 


மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 

இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று. 

அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம்.

இதில் "போன்ற" என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று.

மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம்

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். 
மேலும் உதாரணச் சொற்கள்: 

தேன்மொழி - தேனைப் போன்ற மொழி உடையவள்...
மதிமுகம் - மதி போன்ற முகத்தைக் கொண்டவள்.
கனிவாய் - கனி போன்ற வாயை உடையவள்.

இதுபோன்ற வார்த்தைகள் உவமைத் தொகையைக் குறிக்கும்.

0 comments

Post a Comment