30 March 2014

'குரூப் 2' தேர்வு ஜூன் 29க்கு மாற்றம் : TNPSC GROUP 2 EXAM DATE CHANGE



அரசு துறையில், நேர்முகத் தேர்வு அல்லாத 2,269 பணியிடங்களுக்கான, 'குரூப் 2 தேர்வு, லோக்சபா தேர்தல் காரணமாக, மே மாதம், 18ல் இருந்து, ஜூன், 29க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, மே மாதம், 16ல் நடப்பதை கருத்தில் கொண்டு, குரூப் 2 தேர்வை, ஜூன், 29ம் தேதிக்கு தள்ளிவைத்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா, இன்று அறிவித்தார். ஜூன், 29, காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, இந்த தேர்வு நடக்கும்.

0 comments

Post a Comment