17 July 2014

கிராம நிர்வாக நடைமுறைகள் - கேள்வி பதில்கள் மற்றும் குறிப்புகள்

கிராம நிர்வாகம் என்பது மிக மிக எளிதானதுதான். கிராம நிர்வாகத்தைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டால், பணிச்சூழல் மிக எளிமையாக அமைந்துவிடும்.

அந்த நோக்கத்தில்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணையம் தற்பொழுது, கிராம நிர்வாகம் குறித்த கேள்வி பதில்களையும், தேர்வில் இணைத்துள்ளது. இங்கே கிராம நிர்வாக நடைமுறைகள் Village Administration குறித்த தகவல்கள் மற்றும் கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. படித்துப் பயன்பெறுங்கள்.

கிராம நிர்வாக நடைமுறைகள் - Basics of Village Administration


நிலச் சொந்தக்காரர்கள் நிலவரி. வட்டி அபராதம் செலுத்தாமல் இருந்தால் நிலம் கையகப்படுத்தப்படும்.        
          
12 வருடங்களுக்குள் திருப்பிக்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகார வரம்பிற்குட்டபட்ட நீர் நிலைகளில் மீன்வள குத்தகை மீன் வளக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விடப்படுகின்றன.

ஒருவருக்கு புன்செய் தரத்தீர்வைக்கு ஈடான நன்செய் தரதீர்வை 5 ஏக்கருக்குள் நன்செய் நிலம் வைத்திருந்தால் தள்ளிக் கொடுக்க வேண்டும்.

(10 to 20) மனைக்கு வரி - 1.5%
தர்ம (ம) சமய நிறுவனங்களுக்கு வரி விலக்கு (பிரிவு - 27(1) )
சமுதாய பொழுது போக்கு (சினிமா. களியாட்டம்) வரிவிலக்கு - 50%
சிறு தொழில் (தொழிற்சாலைகளுக்கு) வரிவிலக்கு - 25%
சங்கீதம், நாட்டியம் (சபைகளுக்கு) வரிவிலக்கு - 50%
திரையரங்குகளுக்கு வரிச் சலுகை (10%)
குடிசைப் பகுதி  வரிச் சலுகை - முழு வரிச்சலுகை
நகர்புறம் வரிச் சலுகை 50%
ரொக்கப் பணம் பதிவேடு தண்டல் மூலம் செலுத்தலாம்.
கேட்பு வசூல் பதிவேடு பாக்கிப் பதிவேடு எனப்படும்.
தாய் பத்திரம் எனப்படுவது இணைப்புப் பத்திரங்கள் எனப்படும்.

கிராம நிர்வாகம் குறித்த கேள்வி பதில்கள்: 


1. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
(A) காவல்துறை
(B) வட்டாட்சியர்
(C) வனத்துறை
(D) இம்மூன்றும்

2. கேடி ரிஜிஸ்டரின் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
(A) Known Depradator
(B) Knife Depradator
(C) Killer Depradator
(D) Keen Depradato

3. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
(A) 12-12-1980
(B) 12-12-1990
(C) 12-12-1988
(D) 12-12-1999

4. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1972
(B) 1963
(C) 1986
(D) 1967

5. நீண்டகாலக் குத்தகை என்பது
(A) 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(B) 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(C) 8 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(D) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்

6. 'ஆ' பதிவேடு என்பது
(A) இராணுவ நில பதிவேடு
(B) ரயில்வே நில பதிவேடு
(C) இனாம்களின் நிலைப்புல பதிவேடு
(D) பசலி மாற்றம் பற்றிய பதிவேடு

7. தற்போது 'அ' பதிவேடு இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகிறது
(A) விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
(B) கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
(C) ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
(D) இவை அனைத்தும்

8. இவற்றில் எந்த வரியை கிராம நிர்வாக அலுவலர் வசூலிப்பதில்லை?
(A) நிலவரி
(B) கடன்கள்
(C) அபிவிருத்தி வரி
(D) வருமானவரி

9. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
(A) பதிவேடு A
(B) பதிவேடு B
(C) பதிவேடு B1
(D) பதிவேடு C

10. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு
(D) எட்டு

0 comments

Post a Comment